நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
X

பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் ப.ஸ்ரீவெங்கட பிரியா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றுவது குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டார்

பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் ப.ஸ்ரீவெங்கட பிரியா நேரில் சென்று ஆய்வு செய்தார். லப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதையும், பறக்கும் படைகள் மூலம் அங்கு முறையாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார். மேலும் பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்களிடம் தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றுவது குறித்தும், கொரோனா தொற்று ஏற்படாத வகையில் சமூக இடைவெளியை முழுமையாக பின்பற்றி தேர்தல் நடத்துவது தொடர்பாகவும், தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றுவது குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டார்.

இதில், லப்பைக்குடிக்காடு பேரூராட்சி செயல் அலுவலர் / தேர்தல் நடத்தும் அலுவலர் சதீஷ் கிருஷ்ணன், உதவி தேர்தல் அலுவலர்கள் வெங்கடேசன், ரமேஷ் கண்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!