நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: புகார் தெரிவிக்க கட்டணமில்லா எண் அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா
பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் தொடர்பான புகார்களை மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி எண் வாயிலாக தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பெரம்பலூர் நகராட்சி மற்றும் 4 பேரூராட்சிகளுக்கும் 19.02.2022 அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார்கள் மற்றும் குறைகள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியரகத்தில் தேர்தல் பிரிவில் கட்டுப்பாட்டு அறை 28.01.2022 அன்று முதல் செயல்பட்டுவருகிறது. பொதுமக்கள் தேர்தல் குறித்த புகார்களை 04328-225201 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.
மேற்காணும் தொலைபேசி எண்ணை பயன்படுத்தி பொதுமக்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம். இந்தகட்டுப்பாட்டு அறையானது 28.01.2022 முதல் 18.02.2022 வரை 24 மணிநேரமும் செயல்படும். பொதுமக்களிடம் இருந்து வரப்படும் புகார்கள் மற்றும் குறைகள் உடனடியாக தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பின் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்.ப. ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu