சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு திருச்சி டி.ஐ.ஜி. சரவண சுந்தர் பாராட்டு

சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு திருச்சி டி.ஐ.ஜி. சரவண சுந்தர் பாராட்டு
X
பாராட்டு சான்றிதழ் வெற்ற போலீசாருடன் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு.
பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு திருச்சி டி.ஐ.ஜி. சரவண சுந்தர் பாராட்டு தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு எதிரிகளை பிடித்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த

தலைமைக் காவலர் குமார் என்பவர் மங்கலமேடு காவல் நிலைய குற்ற வழக்கில் நீண்ட காலமாக பிடிக்கபடாமல் இருந்தவரை தனி ஒருவராக சென்று பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்ததற்காகவும்

தலைமைக் காவலர் சந்திரபிரகாஷ் என்பவர் பெரம்பலூர் காவல் நிலையம் சிறுவாச்சூர் பெரியசாமி கோவில் சிலையை உடைத்த எதிரி நாதனை மலை பகுதியில் சென்று பிடித்ததற்க்காகவும், தலைமைக் காவலர் பாலமுருகன் என்பவர் செயின் பறிப்பு வழக்குகளில் குறுகிய காலத்தில் அடையாளம் காட்டி கொடுத்தமைக்காகவும்

முதல்நிலைக் காவலர்ஆறுமுகம் என்பவர் கடலூர் மாவட்டம் வேப்பூரில் நகை பறித்து சென்ற திருடன் 1.அருன்ராஜ் 2.நவாஸ் முகமது 3.வினோத் ஆகியோர்களை அரும்பாவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேப்பந்தட்டையில் பிடித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததற்காகவும்

திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவணசுந்தர் நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்து வெகுமதிகளை வழங்கினார்.

திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவரிடம் வெகுமதி பெற்ற பெரம்பலூர் மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த மேற்படி 4 காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி வெகுவாக பாராட்டினார்.

Tags

Next Story
ai marketing future