பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை பற்றிய பயிற்சி கூட்டம்

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை பற்றிய பயிற்சி கூட்டம்
X

பெரம்பலூரில் வாக்கு எண்ணிக்கைபற்றிய பயிற்சி வகுப்பு கலெக்டர் வெங்கட பிரியா தலைமையில் நடந்தது.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை பற்றிய பயிற்சி கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான பயிற்சி கூட்டம் இன்று (21.02.2022) நடைபெற்றது இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மாவட்ட தேர்தல் அலுவலர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா, கலந்துகொண்டு வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து அலுவலர்களுக்கு எடுத்துரைத்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி மற்றும் நான்கு பேருராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கை மகாத்மா பப்ளிக் பள்ளியில் ஒரே இடத்தில் நடைபெறுகிறது. பெரம்பலூர் நகராட்சிக்கு ஏழு மேசைகளும் ஒவ்வொரு பேருராட்சிகளுக்கும் தலா இரண்டு மேசைகளும் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாகவே தபால் ஓட்டுகளை எண்ணி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேட்பாளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறும் இடம், தபால் ஓட்டுகள் எண்ணும் இடம் எங்கு என்பதை தெளிவாக தெரியப்படுத்த வேண்டும். வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்க குறைவான வித்தியாசங்களே உள்ளதால் இப்பணிகளை மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டும். நுண்பார்வையாளர்கள் மற்றும் வட்டார பார்வையாளர்கள் ஆகியோரிடம் தங்களுக்கு ஏதும் சந்தேகம் இருப்பின் கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். பெல் நிறுவன பொறியாளர்களும் அங்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி இப்பணிகளை முடிக்க வேண்டும். அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக வாக்கு எண்ணிக்கையை நடத்திட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி ஆணையர் குமரிமன்னன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் ரவி (அரும்பாவூர்), அருள்வாசகன் (பூலாம்பாடி), மெர்சி (குரும்பலூர்), சதீஷ்கிருஷ்ணன் (லப்பைகுடிக்காடு), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்) மோகன், தேர்தல் வட்டாட்சியர்சீனிவாசன் மற்றும் வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!