கரும்பு ஏற்றிச்சென்ற டிராக்டர் பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு

கரும்பு ஏற்றிச்சென்ற டிராக்டர் பழுதாகி நின்றதால்  போக்குவரத்து பாதிப்பு
X
கரும்பு ஏற்றிச்சென்ற டிராக்டர் பழுதாகி நின்றதால் பெரம்பலூர் -ஆத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் அருகே ஆத்தூர் சாலையில் சர்க்கரை ஆலைக்கு கரும்பு லோடு ஏற்றிச்சென்ற டிடாக்டர் பழுதாகி நின்றது. நடு சாலையில் டிராக்டர் நின்றதால் பெரம்பலூரிலிருந்து ஆத்தூர் நோக்கி செல்லும் பேருந்துகள் கனரக வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதிக்கபட்டது.சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு கனரக வாகனங்கள் காத்திருக்க நேரிட்டது.

இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று ஆத்தூரிலிருந்து வரும் வாகனங்களை மாற்றுப்பாதையான ஆலம்பாடி பிரிவு சாலையில் திருப்பிவிட்டனர்.பழுதான டிராக்டரில் இருந்து கரும்புகள் மற்றொரு டிராக்கடரில் ஏற்றப்பட்டு பழுதான டிராக்டர் அப்புறப்படுத்தப்பட்டது.இதன் பின்னரே பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் போக்குவரத்து சீரானது.

Tags

Next Story
ai based agriculture in india