பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
X

பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

நாடு முழுவதும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் நடத்தப்படும் சுங்க சாவடிகள் ஏராளமாக உள்ளன. டோல் பிளாசா என்று அழைக்கப்படும் இவற்றின் மூலம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தினந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாயாக வந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் திருச்சி- சென்னை நெடுஞ்சாலை, திருச்சி -திண்டுக்கல் நெடுஞ்சாலை, திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை, திருச்சி -கோவை நெடுஞ்சாலை , திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலைஎன அனைத்து முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளிலும் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் கார், லாரி, பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் சுங்க கட்டணங்கள் வசூல் செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலும் இந்த சுங்கச்சாவடிகளை நடத்தி சுங்க கட்டணம் வசூல் செய்யும் உரிமைகளை வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் குத்தகை எடுத்து உள்ளனர்.

ஆனால் இவற்றில் பணிபுரிபவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படுவதில்லை, தொழிலாளர் நல சட்டங்கள் அமல்படுத்தப்படுவதில்லை என்பது உட்பட பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகின்றன. ஊதிய உயர்வு கோரியும், தொழிலாளர் நல சட்டங்களை முறையாக அமல்படுத்த கோரியும் சுங்கச்சாவடி ஊழியர்கள் பலமுறை போராட்டங்கள் நடத்தி இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களது பிரச்சனை இதுவரை தீர்ந்தபாடில்லை.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 28 பணியாளர்களை அதனை நடத்தி வரும் நிர்வாகம் ஆட்குறைப்பு நடவடிக்கையாக பணி நீக்கம் செய்ததை திரும்ப பெற வலியுறுத்தி அக்டோபர் 1ஆம் தேதி முதல் தொடர்ந்து ஒட்டுமொத்த தொழிலாளர்களும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஏ.ஐ.டி.யு.சி. தலைமையிலான சுங்க சாவடி பணியாளர் சங்கம் திருமாந்துறை கிளையின் தலைவர் மணிகண்டன் மற்றும் பொதுச் செயலாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் நீலகிரி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் அனைத்துக் கட்சிகளின் மாநில தலைவர்களும் ஆதரவாக அறிக்கை விடுத்து வருகின்றனர். திருச்சி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகளும் அக்டோபர் 4ஆம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் திருமாந்துறை சுங்கச்சாவடி நடைபெறும் போராட்டக் களத்திற்கு நேரில் சென்று திருச்சி மாவட்ட பொதுச் செயலாளரும், தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. மாநில நிர்வாக குழு உறுப்பினருமான க.சுரேஷ் போராடும் தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.


அப்போது தொழிலாளர் துறையும் நிர்வாகமும் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக பணியில் அமர்த்தி போராட்டத்தை முடிவு கொண்டு வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மாவட்ட தலைவர் வே. நடராஜா மற்றும் சமயபுரம் டோல் பிளாசா தொழிற்சங்கத்தின் தலைவர் பிரபாகரன், செயலாளர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil