டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுக்களுக்காக இணையவழியில் இலவச பயிற்சி

டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுக்களுக்காக இணையவழியில் இலவச பயிற்சி
X

பைல் படம்.

பெரம்பலூரில் டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுக்களுக்காக இணையவழியில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2022-ற்கான உத்தேச தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் Group II – 5730 பணியிடங்களும் Group IV, VAO – 5255 பணியிடங்களுக்கு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் தேர்விற்கான அறிவிக்கை வெளியிடவுள்ளதைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட போட்டித்தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு Group IV /IIA விற்கான இலவச பயிற்சி வகுப்பு பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் 12.01.2022 முதல் வாரநாட்களில் இணைய வழியாக ( Google meet செயலி) காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் Group IV மற்றும் Group- 2A தேர்விற்கான பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதோடு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இவ்வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வேலைவய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 94990 55913 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலோ பதிவு செய்து, வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story