செயின் ஜெயபால் என சந்தேகிக்கப்பட்டவர்கள் கஞ்சா கருப்பாக கைது செய்யப்பட்டனர்

செயின் ஜெயபால் என சந்தேகிக்கப்பட்டவர்கள் கஞ்சா கருப்பாக கைது செய்யப்பட்டனர்
X

பெரம்பலூர் அருகே கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டவர்கள்

பெரம்பலூர் அருகே செயின்பறிப்பு குற்றவாளிகள் என சந்தேகப்பட்ட மூன்று பேரிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்

பெரம்பலூர் அருகே ஆதனூர் பேருந்து நிறுத்தம் அருகே குளத்தூரை சேர்ந்த சரத்குமார்,கோவை காரைமடை பகுதியை சேர்ந்த சபஷ்டி ராஜேந்திரன், திருச்சி அழுந்தலைப்பூரைச் சேர்ந்த மாவேந்தன் ஆகிய மூன்று பேர் பெட்டிகடையில் பொருட்கள் வாங்கியதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியே சென்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர் மூவரையும் அழைத்து விசாரித்துள்ளார்.

இதைப்பார்த்ததும் அங்கு திரண்ட ஆதனூர் கிராம பொதுமக்கள், தொடர் செயின்பறிப்பில் ஈடுபட்டது இவர்கள் தான் என காவல்துறை துணை கண்காணிப்பாரிடம் புகார் தெரிவித்து இங்கேயே விசாரிக்க வேண்டும் என கூறி வாக்குவாதம் செய்தனர்.

இதையடுத்து மருவத்தூர் காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து மூன்று பேரிடமும் விசாரணை செய்து சோதனையிட்டனர் சோதணையில் சபஷ்டி ராஜேந்திரன் வைத்திருந்த பையில் ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது.

அதைத்தொடர்ந்து மருவத்தூர் காவல்நிலையத்தில் வைத்து மூன்றுபேரிடமும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை செய்யப்படும் மூன்று பேரில் சரத்குமார், சபஷ்டிராஜேந்திரன் என்ற இருவரும் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!