திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
X
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பரிசு பெற்ற மாணவர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா.
திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெரம்பலூர் கலெக்டர் பரிசு வழங்கினார்.

திருக்குறளை மாணவர்கள் இளம் வயதிலேயே மனப்பாடம் செய்தால் அவை பசுமரத்தாணி போல் பதிந்து, நெஞ்சில் நிலைத்து அவர்களது வாழ்க்கைக்கு வழிகாட்டும். மாணவர்கள் தாம் பெறுகின்ற கல்வியறிவோடு, நல்லொழுக்கம் மிக்கவர்களாக வளர்வதற்கும் வழிவகுக்கும். எனவே, திருக்குறள் முற்றோதல் செய்யும் மாணவச் செல்வங்களுக்கு பரிசு வழங்கிப் பாராட்டுவது, மாணவர்களின் நல்வாழ்வுக்குத் துணை நிற்பதாகவும், திருக்குறள் நெறி பரவ வழி வகுப்பதாகவும் அமையும் என்று கருதி, தமிழக அரசு திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசினை வழங்கி வருகிறது.

அதனடிப்படையில், 2020 -21 ஆம் ஆண்டில் வெற்றிப் பெற்ற பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 5ஆம் வகுப்பு பயிலும் லத்திகாஸ்ரீ என்ற மாணவிக்கும், திருமாந்துறை புனித ஆண்ட்ரூஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் கார்த்தீசன் என்ற மாணவருக்கும் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா பரிசுத் தொகை தலா ரூ.10,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, கோட்டாட்சியர் நிறைமதி சந்திரமோகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!