பேருந்து நிழற்குடை இல்லாமல் வெயிலிலும் மழையிலும் தத்தளிக்கும் பொதுமக்கள்

ஒதியம் - அசூர் குறுக்குச் சாலையில் பேருந்து நிழற்குடை இல்லாமல் பொதுமக்கள் தவித்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர் முதல் அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் இடையே அமைந்துள்ள ஒதியம் - அசூர் என்ற இடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவ்விடத்தில் பல கோடி மதிப்பில் ரவுண்டான வருவதாக கூறி அவ்விடத்திலிருந்து பொதுமக்கள் உபயோகத்தில் இருந்த மூன்று பேருந்து நிழற்குடைகளை அகற்றினர் .

பொதுமக்கள் விசாரணையின்போது அவ்விடத்தில் ரவுண்டானா என்பது யாருக்கும் பயனற்றது என்று கூறும் நிலையில் இருந்த மூன்று பேருந்து நிழற்குடைகளை அகற்றியதால் பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்துள்ளது. ஒதியம் மற்றும் அசூர்பகுதிகளிலிருந்து வரும் ஆண்கள், பெண்கள். குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண் என்று வரும் பொதுமக்கள் அரியலூர் மற்றும் பெரம்பலூர் செல்வதற்கு அவ்விடத்தில்தான் நின்று பஸ் ஏறி பயணம் செய்ய வேண்டும்.

இந்த நிலையில் இருந்த மூன்று பேருந்து நிழற்குடைகளை அகற்றியதால் வெயில் நேரத்தில் கடும் வெயிலில் நிற்கும் சூழ்நிலையும் அதே நேரத்தில் மழை நேரத்தில் கொட்டும் மழையில் நிற்கும் அவல நிலையும் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் விதத்தில் அவ்விடத்தில் தற்காலிக கீற்றுக் கொட்டகை நிழல்குடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைத்திருக்கலாம்.

இதனால் பேருந்து ஏற வரும் பொதுமக்கள் அருகே உள்ள மின் கம்பம் மரத்தின் நிழலில் நிற்கும் அபாயம் நிலையில் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!