நகர்புற தேர்தல் நடத்தும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி

நகர்புற தேர்தல் நடத்தும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி
X

க்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் மாவட்ட தேர்தல் அலுவலர் ப.ஸ்ரீவெங்கட பிரியா நேரில் ஆய்வு செய்தார்.

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் ப.ஸ்ரீவெங்கடபிரியா நேரில் ஆய்வு செய்தார்

பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் பள்ளியில் நகர்புற தேர்தல் நடத்தும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் மாவட்ட தேர்தல் அலுவலர் ப.ஸ்ரீவெங்கட பிரியா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நகர்ப்புற தேர்தல் நடத்தும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மாவட்ட தேர்தல் அலுவலர் ப.ஸ்ரீவெங்கட பிரியா நேரில் சென்று பயிற்சி வகுப்பினை ஆய்வு செய்தார்.

பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சிறப்பாக நடைபெற தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் அனைத்தையும் நன்றாக தெரிந்து கொண்டு அவைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

நீங்கள் அனைவரும் ஏற்கனவே பல்வேறு தேர்தல்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்களாக இருப்பினும் இங்கு பயிற்சியில் கூறப்படும் விவரங்களை முழுமையாக கேட்டறிந்து அவர்களைப் பின்பற்ற வேண்டும். கொரானா தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் முழுமையாக பின்பற்ற வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சிறப்பாக நடைபெற நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!