தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் சார்பில் மாட்டுப் பொங்கல் விழா

தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் சார்பில் மாட்டுப் பொங்கல் விழா
X

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் சார்பில் மாட்டுக்பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் சார்பில் மாட்டுப் பொங்கல் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனம் சார்பில், மாட்டு பண்ணையில் மாட்டுப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்களின் செயலாளர் நீல்ராஜ்,மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், அனந்தலட்சுமி கதிரவன், இயக்குநர்கள் பூபதி, மணி, நிதி அலுவலர் ராஜசேகர் முன்னிலை வகித்தனர்.

விழாவையொட்டி 100க்கும் மேற்பட்ட மாடுகள் பூக்கள், பொட்டுக்களால் அலங்கரிப்பட்டது.

மாட்டுப்பண்ணையில் கொடி, தோரணம், கரும்பு கட்டப்பட்டிருந்தது. கல்வி நிறுவன செயலாளர் நீல்ராஜ் பொங்கலை சுவாமிக்கு படைத்தார். தாளாளர் சீனிவாசன் பசு மாட்டுக்கும், அதன் கன்றுக்கும் பொங்கல் ஊட்டினார். இதை தொடர்ந்து பணியாளர்கள் அனைவருக்கும் பொங்கல், கரும்புகள் வழங்கப்பட்டன. விழாவில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவன இயக்குநர் ஜெயந்தி, செந்தில், ஜெகநாதன்,நந்தகுமார் மற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!