மாணவர்களை நிற்க வைத்து பிரம்பால் அடித்த ஆசிரியை- வைரலாக பரவும் காட்சி

மாணவர்களை நிற்க வைத்து பிரம்பால் அடித்த ஆசிரியை- வைரலாக பரவும் காட்சி
X

பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியை.

பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவர்களை நிற்க வைத்து ஆசிரியை பிரம்பால் அடித்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக பரவி வருகிறது.

பெரம்பலூர் அருகே சு.ஆடுதுறையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.கிராமப்புறத்தை சேர்ந்த மாணவர்களே இங்கு பெரும்பாலும் பயின்று வருகின்றனர்.இந்த நிலையில் சு.ஆடுதுறை பள்ளி தலைமை ஆசிரியை வண்டார்குழலி என்பவர் மாணவர்களை வரிசையாக நிற்க வைத்து பிரம்பால் அடிக்கும் காட்சி சமூக வலைதலங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமூக வலைதளங்களில் இயங்குவோர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். பிரம்பால் அடிக்கும் வீடியோ குறித்து விசாரித்ததில் மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக வந்த காரணத்தால் தலைமை ஆசிரியை அடித்ததாக கூறப்படுகிறது.

இந்த காட்சிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் கவனத்திற்கு சென்றுள்ளதாகவும்,அது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருவதாகவும் தெரிகிறது.மாணவர்களை எக்காரணம் கொண்டும் அடிக்க கூடாது என்று கூறப்படும் நிலையில்,தலைமை ஆசிரியை பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்களை பிரம்பால் அடித்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare