பெரம்பலூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட குழு கூட்டம்

பெரம்பலூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு கூட் டம் பெரம்பலூர் துறை மங்கலத்தில் உள்ள விவசாயிகள் சங்க அலுவலகத்தில் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது . சங்க மாநில செயலாளர் சாமிநடராஜன் கலந்து கொண்டு பேசினார் . மாவட்ட செயலாளர் செல்ல துரை , மாவட்டதுணை தலைவர் சக்திவேல் , பொருளாளர் சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
கால்நடை பராமரிப்பு வட்டி இல்லா கடன் மத்திய அரசு வங்கிகள் மூலமாக கூட்டுறவு வங்கிகள் மூலமாகவும் வழங்குவதை அனைத்து வி சாயிகளுக்கும் ரூ .2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் . பெரம்பலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம் பயிருக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் . 5 தொழில்கூட்டமைப்பு சார்பில் மார்ச் 28 ம் தேதி நடைபெறும். அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக விவசாயிகள் சங்கம் சார்பில் பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டு அருகில் சாலை மறியல் போராட் டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu