பெரம்பலூர் ஆதிதிராவிட, பழங்குடியினர் விவசாயிகளுக்கு தாட்கோ கடனுதவி
மாதிரி படம்
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகள் PVC பைப் வாங்கிட மற்றும் மின் மோட்டார் மாற்றிட தாட்கோ மூலம்மானியம் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஸ்ரீ வெங்கடபிரியா, தெரிவித்துள்ளார்.
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகள் தங்கள் நிலம் மேம்பாட்டிற்காக PVC PIPE (பிவிசி பைப்) வாங்க 15,000/- ரூபாய் மானியமாக வழங்கப்படும். பைப் லைனிற்கு மான்யம் வழங்கும் திட்டத்தை பொறுத்தவரை, வேளாண் / தோட்டக் கலை துறையில் பிவிசி குழாய்கள் வாங்க மானியம் பெற்றவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற இயலாது. எனினும் ஏற்கனவே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியத் திட்டத்தில் அல்லது வேளாண் / தோட்டக் கலை துறையில் மின் மோட்டார் / டீசல் பம்ப் மானியம் பெற்றவர்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
மேலும் ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் அல்லது பழைய மின் மோட்டாருக்குப் பதில் புதிய மின் மோட்டார் வாங்க 10,000/- ரூபாய் மான்யமாக வழங்கப்படும். மின் மோட்டார் மான்யம் வழங்கும் திட்டத்தை பொறுத்தவரை, பிரதமர் விவசாய நிதியுதவித் திட்டத்தில் மின் மோட்டார் மானியம் பெற்றவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற இயலாது. வேளாண், தோட்டக் கலை துறையின் திட்டங்களில் மின் மோட்டார் மானியம் பெற்றால் இத்திட்டத்தில் மானியம் பெற வழிவகை இல்லை
இத்திட்டத்தில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் 2 இலட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். விவசாயத்தை மட்டுமே தொழிலாக கொண்டிருக்க வேண்டும். துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து நிலுவையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஏற்கனவே, தாட்கோ திட்டத்தில் நிலம் வாங்குதல், மேம்படுத்துதல் போன்றவற்றில் பயன்பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிடச்சான்று, குடும்ப அட்டை, ஆதார் கார்டு, சிட்டா, பட்டா, அடங்கல், அ-பதிவேடு, புலப்பட வரைபடம் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் மற்றும் விலைப்புள்ளியுடன் http://application.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தாட்கோ அலுவலகத்தை 04328 - 276 317 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu