பெரம்பலூர் மாவட்டத்தில் 2 கோயில்களில் அடுத்தடுத்து கொள்ளை

பெரம்பலூர் மாவட்டத்தில் 2 கோயில்களில் அடுத்தடுத்து கொள்ளை
X
பெரம்பலூர் மாவட்டத்தில் 2 கோயில்களில் அடுத்தடுத்து கொள்ளை நடந்தது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் எல்லையம்மன் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவில்கள் உள்ளன . பூசாரி மருதமுத்து கோயிலுக்கு விளக்கு போட்டு விட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார் .

இன்று காலை தர்மகத்தா மனைவி சரோஜா பால் கறக்க செல்லும்பொழுது கோவிலை பார்த்த போது , கோயில் பூட்டு உடைந்து கேட் திறந்த நிலையில் இருப்பதை கண்டு , தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார் . கோவிலில் சென்று பார்த்த போது இரண்டு உண்டியல்களையும் காணவில்லை . பின்னர் தேடிய போது அம்மா பூங்கா அருகில் ஒரு உண்டியலும் , பெருமத்தூர் பிரிவு சாலை அருகே ஒரு உண்டியலும் , கிடந்ததை கண்டு பிடித்தனர் . அதில் பக்தர்கள் செலுத்திய சுமார் ரூ. 15 ஆயிரம் பணத்தை காணவில்லை .

இதே போன்று , ஓலைப்பாடியில் உள்ளது அய்யனார் கோவில் . அதன் பூசாரி , மதியம் 1 மணி அளவில் கோவிலை பூட்டி விட்டு சென்றுவிட்டார் . இன்று காலை அப்பகுதி மக்கள் பார்த்த போது , கோவிலை திறந்து கிடந்ததுடன் , உண்டியலும் காணவில்லை என அறிந்து தேடிய போது , கல்லை வரும் வழியில் உள்ள செல்லியம்மன் கோவில் அருகே கிடப்பதை அறிந்தனர் .

இந்த இரு கொள்ளை சம்பவங்கள் குறித்தும் , கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் , கைரேகை நிபுணர்களுடன் வந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து , கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர் . மேலும் , அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

Tags

Next Story