பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது.
பெரம்பலுார் வட்டாரத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சியிலும் உள்ள பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு அரசு மேல்நிலைப் பள்ளி பெரம்பலூரில் ஒருங்கிணைந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது/
இம்முகாமை மாற்றுத் திறனாளிகள் நல் அலுவலர் பொம்மி முன்னிலையில் முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.அறிவழகன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் .
இம்முகாமில் பிறப்பு முதல் 18 வயது வரை உள்ள மனவளர்ச்சி குன்றிய 48 குழந்தைகளும் , உடல் இயக்க குறைபாடுடைய 24 குழந்தைகளும் , செவித்திறன் குறைபாடுடைய 42 குழந்தைகளும் , பார்வைக் குறைபாடுடைய 43 குழந்தைகளும் ஆக மொத்தம் 157 மாற்றுத்திறனுடைய குழந்தைகள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர் .
இம்மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை மனநல மருத்துவர் வினோத் , எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் சிவராமன் , காது , மூக்கு , தொண்டை மருத்துவர் இரமேஷ் . கண் மருத்துவர் இராஜேஸ்வரி , குழந்தைகள் நல மருத்துவர் பாலமுருகன் , மற்றும் ஆர்.பி.எஸ்.கே. மருத்துவர்கள் விவேக் ,ராதிகா . செவி பரிசோதகர் விசாலி , கண் பரிசோதகர் செந்தில்நாதன் , ரேச்சல் ஆகியோர் பரிசோதித்து உதவி உபகரணங்கள் , தேசிய அடையாள அட்டை மற்றும் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்தனர் .
இதில் நடைப்பயிற்சி சாதனம் 2 குழந்தைகளுக்கும் , கண் கண்ணாடி 14 குழந்தைகளுக்கும் , சிறப்பு சக்கர நாற்காலி 3 குழந்தைகளுக்கும் , கார்னர் சீட் 3 குழந்தைகளுக்கும் , பிரெய்லி கிட் 2 குழந்தைகளுக்கும் , செவித்துணைக் கருவி 5 குழந்தைகளுக்கும் ஆக மொத்தம் 29 குழந்தைகள் உதவி உபகரணங்களுக்காகவும் , 2 குழந்தைகள் அறுவை சிகிச்சைக்காகவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர் .
UDID அடையாள அட்டைக்காக 19 மாற்றுத்திறனுடைய மாணவர்கள் விவரம் பதிவேற்றம் வருவாய் துறை மற்றும் அரசு கேபிள் டி.வி. தனி வட்டாட்சியருடன் ஒருங்கிணைந்து இ - சேவை மையங்கள் மூலம் வருமான சான்று விவரங்கள் இணைய வழி பதிவேற்றம் செய்யப்பட்டது . முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 42 மாற்றுத்திறனுடைய விவரம் பதிவேற்றம் செய்யப்பட்டது . ஆதார் அட்டை மாற்றுத்திறனுடைய எடுக்கப்பட்டது . செய்யப்பட்டது .
மாணவர்கள் இல்லாத 6 அட்டை குழந்தைகளுக்கு எல்காட் மூலம் ஆதார் முகாமில் கலந்துகொண்ட மாற்றுத்திறனுடைய மாணவர்களில் 23 நபர்களுக்கும் புதிதாக மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது . இம்மருத்துவ முகாமில் பெரம்பலுார் மாவட்ட கல்வி அலுவலர் கே.சண்முகம் . வேப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் ஜெகநாதன் , சுப்ரமணியன் , பெரம்பலுார் அரசு உதவி திட்ட அலுவலர் பெரம்பலூர் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் வெங்கடேசன் , வட்டார கல்வி அலுவலர் ஜோதிலட்சுமி பொறுப்பு வட்டார கல்வி அலுவலர் மைய மேற்பார்வையாளர் கு.தேவகி , மாவட்ட ஆய்வாளர் பழனிச்சாமி , உள்ளடக்கிய ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் , வட்டார வள கல்வி திட்டக்கூறு பெ.பாரதிதாசன் உள்ளிட்ட அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் , பணியாளர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள், சுகாதார நலப்பணியாளர்கள் , ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட மேற்பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்கள் , இயன்முறை மருத்துவர்கள் , சிறப்பு பயிற்றுநர்கள் , பள்ளி ஆயத்தப்பயிற்சி மைய ஆகியோர் கலந்துகொண்டனர் . இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பெரம்பலூர் வட்டார வள மேற்பார்வையாளர் தேவகி , மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் ஆகியோர் செய்திருந்தனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu