பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வங்கி கடன் மேளா

பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வங்கி கடன் மேளா
X

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வங்கி கடன் மேளா நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வங்கி கடன் மேளா நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் லோன் மேளா மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது.

இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் ஒரு நபருக்கு ரூ.1,00,000 மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, ரூ.7,540 மதிப்பிலான சக்கர நாற்காலி மற்றும் 35 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை (UDID) முதலிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கி கடன் வழங்கிட சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமினை பயன்படுத்தி தொழில் தொடங்குவதற்கான லோன் குறித்த சந்தேகங்களை உரிய அலுவலர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் கடனுதவி பெறுவதற்கான படிவங்கள் நிரப்புவது, லோன் பெறுவதற்கான ஆவணங்களில் ஏற்படும் குறைபாடுகளை சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்து விரைந்து கடனுதவி பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒவ்வொருவரின் திட்டங்களுக்கேற்ப கடனுதவிகளை பெற்று வாழ்க்கையில் முன்னேற மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இம்முகாமில் வங்கிக் கடன் வேண்டி 63 மாற்றுத்திறனாளி நபர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) வேண்டி 17 நபர்கள், தொகுப்பு வீடு வேண்டி ஒரு நபர், வேலைவாய்ப்பு வேண்டி 2 நபர்கள், திறன்பேசி (Smart Phone) வேண்டி 2 நபர்களும், பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி 1 நபர், பட்டா மாற்ற வேண்டி ஒரு நபர், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வேண்டி 2 நபர்களும் என மொத்தம் 89 நபர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கியுள்ளனர். அம்மனுவினை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பகிர்ந்தளித்து மனு மீதான நடவடிக்கைகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என பேசினார்.

இம்முகாமில் மாவட்ட பொது மேளாலர் தொழில் மையம் செந்தில் குமார், முன்னோடி வங்கி மேலாளர் பாரத் குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!