பெரம்பலூர் அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்த இடத்தில் எஸ்.பி. மணி விசாரணை
பெரம்பலூர் அருகே துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் எஸ்.பி. மணி நேரடி விசாரணை நடத்தினார்.
பெரம்பலூர் அருகே நாரணமங்கலம் கிராமத்தை யொட்டிய மலைஅடிவாரத்தில் தமிழ்நாடு காவல்த்துறையின் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது.இந்த பயிற்சி மையத்தில் கடந்த 21 ந்தேதி முதல் நேற்றுவரை ரயில்வே போலீசாருக்கு பயிற்சி அளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.அதன்படி அங்கு பயிற்சியும் நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் நேற்று துப்பாக்கிசுடும் பயிற்சி மையத்தின் மலைக்கு பின்பகுதியில் உள்ளமருதடிஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்ரமணி என்பவரின் வீட்டின் மேற்கூரையினை துப்பாக்கி குண்டுபாய்ந்து துளை ஏற்பட்டுள்ளது.இன்று அதனை சீர் செய்ய நினைத்து மேலே ஏரிபார்க்கும்போது துளையில் துப்பாக்கி குண்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
துப்பாக்கிசுடும் மையத்தில் இருந்து வந்த குண்டுதான் வீட்டின்மேற்கூரையை துளைத்தது என்றும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பும் இதே போல் துப்பாக்கி குண்டு வந்து விழுந்ததாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.இதையடுத்து பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணி துப்பாக்கி சுடும் மையத்தை நேரில்பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.மேலும் எஸ்.பி சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று துப்பாக்கி குண்டை கைப்பற்றி அதன் நீள அகலத்தை பிரத்யேக ஸ்கேலில் வைத்து அளவீடு செய்தார்.இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடைபெற்று வருவதாக புதிய கூறிய எஸ்.பி மணி,கடந்த நாட்களாக துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் ரயில்வே போலீசாருக்கான பயிற்சி நடைபெற்றுவந்ததாக குறிப்பிட்டார்.
மேலும் கைப்பற்றப்பட்டது தமிழக போலீசார் பயன்படுத்தும் குண்டு அல்ல என்றும் அது ரயில்வே போலீசார் பயன்படுத்தும் குண்டுஎன்றும் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது கோட்டாட்சியர் நிறைமதி சந்திரசேகரன் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu