பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி,  பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு வெகுவிமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.

பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

பிரசித்தி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மரகதவல்லி தாயார் உடனுறை மதனகோபால சுவாமி திருக்கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்ட இத்தலம்,பஞ்ச பாண்டவர்கள் பூஜித்து வழிபட்டு சென்றதால், இத்தலம் சகோதர்களிடையே ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கும் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.

சகல நோய்களை தீர்க்கும் நந்தியாவட்டையை ஸ்தல விருச்சமாக கொண்டது. இத்தகைய பெருமைக்குரிய ஸ்தலத்தில் வைகுண்ட ஏகாதசி விழா, கடந்த டிச 04ம் தேதி, பகல் பத்து விழாவை தொடங்கி ஒவ்வொரு நாளும் அருள்மிகு மதனகோபாலசுவாமி பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். டிச.13ம் தேதி நேற்று, மோகினி அலங்காரமும் நடைபெற்றது.


இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான டிசம்பர் 14-ம் தேதி இன்று அருள்மிகு மதனகோபாலசுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அருள்மிகு மதனகோபாலசுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா, முழக்கத்தோடு தரிசனம் செய்து சென்றனர். இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சிவசுப்பிரமணியன் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story