பெரம்பலூர் அருகே சமூக நீதி மனித உரிமைகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு

பெரம்பலூர் அருகே சமூக நீதி மனித உரிமைகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு
X

பெரம்பலூர் அருகே பேரளி கிராமத்தில் போலீசார் மனித உரிமைகள் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

பெரம்பலூர் அருகே பேரளி கிராமத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணசுந்தர் உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி மேற்பார்வையில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ்.எம்.வளவன் மற்றும் அவரது குழுவினர்கள் இணைந்து பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராமத்தில் வசிக்கும் பொது மக்களிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் பொது மக்களிடம் பேசிய துணைக் காவல் கண்காணிப்பாளர் சமூகத்தில் உள்ள அனைவரும் சமம் என்றும், ஒருவர் ஒருவரிடம் பேசும் போது சகோதர சகோதரிகள் உணர்வோடு பேச வேண்டும் எனவும் கூறினார்.

மேலும் உங்கள் இருப்பிட பகுதியில் உள்ள கடைகளில் இரட்டை டம்ளர் முறை இருந்தால் கண்டிப்பாக தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!