சிப்காட் விவகாரம்: சிபிஎம், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

சிப்காட் விவகாரம்: சிபிஎம், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
X

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க திரண்டு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் எம்ஜிஆர் நகர் பொதுமக்கள்.

பொதுமக்கள் பயன்படுத்தி வரும் அங்கன்வாடி, நியாய விலைக்கடை உள்ள இடத்தை சிப்காட் நிறுவனம் ஆக்கிரமித்து முள்வேலி அமைப்பு

பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் ஊராட்சியில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். எம்.ஜி.ஆர். நகர் மேற்கு பகுதியில் சிப்காட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனிடையே, சிப்காட் நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விட்டு, விட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வரும் அங்கன்வாடி, நியாய விலைக்கடை உள்ளிட்டவைகள் அமைந்திருக்கும் இடத்தை, சிப்காட் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அமைத்ததைக் கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்லதுரை தலைமையில், எம்.ஜி.ஆர் நகர் பொதுமக்கள் முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் செய்து, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags

Next Story
video editing ai tool