இ-பதிவு, EMI -யை ரத்து செய்ய ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை
தமிழகத்தில் அரசு அறிவித்த கொரோனா ஊரடங்கு தளர்வால் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எந்த பயனும் இல்லை என்றும் அரசு அறிவித்துள்ள மாவட்டங்களுக்குள் இ பதிவு முறையால் பொதுமக்களும் தாங்களும் சிரமப்பட்டு வருவதாகவும் அதனால் இ பதிவை ஷேர் ஆட்டோகளுக்கு ரத்து செய்ய வேண்டும் என்றும், கடந்த மாதம் ஊரடங்கால் வருமானம் இழந்த தங்களுக்கு ஷேர் ஆட்டோ மாத ஈ.எம்.ஐ யை நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஊரடங்கு தளர்வால் மக்கள் ஓரளவிற்கு கடை தெருக்களுக்கு பொருட்கள் வாங்க வருகை தருபவர்கள் ஆட்டோக்களை எதிர் பார்ப்பதால் தமிழக அரசு மாவட்டங்களில் ஷேர் ஆட்டோக்களை சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்க வேண்டும்.
மேலும் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க தமிழக அரசு முயற்ச்சி செய்து ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதரத்தை மீட்டுத்தர வேண்டுமென வலியுறுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu