பெரம்பலூர்: பாலியல் புகாரில் சிக்கிய அ.தி.மு.க. நகர செயலாளர் கைது

பெரம்பலூர்: பாலியல் புகாரில் சிக்கிய அ.தி.மு.க. நகர செயலாளர் கைது
X
பெரம்பலூர் மாவட்டத்தில் பாலியல் புகாரில் சிக்கிய பூலாம்பாடி அ.தி.மு.க. நகர செயலாளர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர் அருகே பூலாம்பாடி அ.தி.மு.க. நகரசெயலாளராக இருப்பவர் வினோத்(48).இவர் மீது ஏற்கனவே அரசுவேலை வாங்கிதருவதாக பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி மோசடி செய்ததாக பெரம்பலூர் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இவர் மீது பூலாம்பாடியை சேர்ந்த சுயநினைவில்லாத மாற்றுத்திறனாளியின் மனைவி ஒருவர் அரும்பாவூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் பூலாம்பாடி அ.தி.மு.க. நகரசெயலாளர் வினோத் தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துவந்ததாகவும்,கத்தியை காட்டி மிரட்டி ஆசைக்கு இணங்க சொன்னதாகவும் சம்மந்தப்பட்டபெண் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தன்னுடைய ஆசைக்கு இணங்காவிட்டால் நீ நடத்தும் கேஸ் கம்பெனியோடு உன்னையும் கொளுத்திவிடுவேன் என வினோத் அடிக்கடி மிரட்டிவந்ததாகவும் தொந்தரவுக்கு உள்ளான பெண் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.அதன் அடிப்படையில் அரும்பாவூர் போலீசார் வழக்குபதிவு செய்து வினோத்தை கைது செய்துள்ளனர்.

அவர் மீது கொலைமுயற்சி, அத்துமீறி வழிமறித்து மிரட்டுதல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். பாலியல்புகாரில் பூலாம்பாடி அ.தி.மு.க.நகர செயலாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!