குன்னம் பகுதியில் தொடர் திருட்டு: மர்ம நபர்கள் அட்டூழியம்; பொதுமக்கள் அச்சம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வயலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன் (55) விவசாயி. இவருக்கு வயலப்பாடி கிராமத்தில் அரியலூர் திட்டக்குடி மெயின் ரோட்டில் வீடு உள்ளது. ஆனால் ராமன் 10 வீடு தள்ளி உள்ள மற்றொரு வீட்டில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் மெயின் ரோட்டில் உள்ள ராமன் வீட்டை இரவு யாரோ மர்ம நபர்கள் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அந்த வீட்டில் பணம் நகை எதுவும் கிடைக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து சுமார் ஒரு மணிநேரம் கழித்து அதே மெயின் ரோட்டில் ரமேஷ் (45) என்பவரது மளிகைக் கடையின் முன்பக்க இரும்பு கதவின் பூட்டை கடப்பாரை கம்பியால் உடைத்தனர். பின்னர் மர கதவின் பூட்டையும் உடைத்துள்ளனர். கதவை உடைக்கும் சத்தம் கேட்டு அருகில் உள்ள சுப்பிரமணியன் என்பவர் வீட்டின் கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது அவர் திருடர்கள் என சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஒன்று கூடினர்.
அப்பகுதியில் உள்ளவர்கள் வயலப்பாடி முழுவதும் தேடி பார்த்துள்ளனர். மர்ம நபர்கள் சிக்கவில்லை. இதற்கிடையில் உஷாரான மர்ம நபர்கள் ஏற்கனவே உடைக்கப்பட்ட வீட்டின் உள்ளே சென்று மறைந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அனைவரும் வீட்டுக்குச் சென்றதும் மர்ம நபர்கள் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த குன்னம் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. குன்னம் பகுதியில் நடைபெறும் தொடர் திருட்டால் மக்கள் பதட்டத்தில் உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu