சீனியர் ஆண்கள் கபடி போட்டிக்கு பெரம்பலூரில் வீரர்கள் தேர்வு‌

சீனியர் ஆண்கள் கபடி போட்டிக்கு பெரம்பலூரில் வீரர்கள் தேர்வு‌
X

பெரம்பலூரில் கபடி போட்டிக்கான வீரர்கள் தேர்வு நடந்தது.

சீனியர் ஆண்கள் கபடி போட்டிக்கான வீரர்கள் தேர்வு பெரம்பலூரில் நடந்தது.

மாநில அளவிலான சீனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி, தென்காசி மாவட்டத்தில், மார்ச் 18ம் தேதி முதல் நடக்கிறது. இந்த ஆண்டு போட்டிகள் நடத்தப்படுவதால் வீரர்களுக்கான பொறுக்குத் தேர்வு பெரம்பலூர் விளையாட்டு அரங்கில் அமெக்சூர் கபடி குழு தலைவர் முகுந்தன் தலைமையில் நடைபெற்றது.

அமெச்சூர் கபடி குழு செயலாளர் ரமேஷ் , துணைச் செயலாளர் கஜேந்திரன் ,முரளி, பெரியசாமி ஆகியோர் வீரர்களை தேர்வு செய்தனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 80க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற வீரர்களில் இருந்து, 25 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட வீரர்கள், பெரம்பலூர் மாவட்ட அமைச்சர் கபடி சங்கம் சார்பில் நடக்கும், 10 நாட்கள் பயிற்சி முகாமில் பங்கேற்று அதிலிருந்து சிறந்த, 12 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவிலான போட்டியில் பெரம்பலூர் மாவட்ட அணி சார்பில் பங்கேற்பர்.

Tags

Next Story
ai as the future