பெரம்பலூர் அரசு பஸ்களில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட பள்ளி மாணவர்கள்

பெரம்பலூர் அரசு பஸ்களில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட பள்ளி மாணவர்கள்
X

பெரம்பலூரில்  அரசு பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர். 

விடுமுறை பற்றி அறியாத பெரம்பலூர் அரசு பஸ்களில் ஆபத்தான பயணத்தை பள்ளி மாணவர்கள் மேற்கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகள் மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீ வெங்கட பிரியா காலையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் .

இந்நிலையில் மாணவர் மாணவர்கள் பெரும்பாலோனோர் இந்த அறிவிப்பு பற்றி தகவல் தெரியாத காரணத்தினால் வழக்கம்போல் காலையில் புறப்பட்டு பள்ளிக்கல்வி பள்ளிக்கு வருகை புரிந்தனர். பின்னர் பள்ளி விடுமுறை என தெரிந்தவுடன் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பும்போது அப்பொழுது அரசுப் பேருந்துகளில் தீபாவளி பண்டிகை கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் மாணவர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.

இது போன்ற பண்டிகை நாட்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story