பெரம்பலூர்: பள்ளி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடக்கம்

பெரம்பலூர்: பள்ளி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடக்கம்
X
பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி இன்று தொடங்கியது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் 15 வயது முதல் 18 வரை உள்ள மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று துவங்கியது. இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 150 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 15 முதல் 18 வயது உள்ள மாணவ-மாணவிகளில் 10, 11 , 12 வகுப்புகளில் உள்ள மொத்தம் 24,431 பேர் . மேலும் பள்ளியிலிருந்து விடுபட்டோர் மற்றும் தொழிற் கல்வி பயில்வோர்கள் 1669 பேர் என மொத்தம் 26,100 பேர் இதன் மூலம் பயன் பெறுவார்கள்.

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்இன்று நடைபெற்ற முதற்கட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து மாணவர்களுக்குபோதுமான தடுப்பூசி குறித்த அறிவுரை வழங்கப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அறிவழகன், சுகாதார துறை மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குனர் செந்தில் குமார் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் சண்முகம், ஜெகநாதன், உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள்,பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!