அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி பூமலை சஞ்சீவிராயர் கோயிலில் சிறப்பு வழிபாடு

அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி பூமலை சஞ்சீவிராயர் கோயிலில் சிறப்பு வழிபாடு
X

பாடாலூர் அருகே பூமலை சஞ்சீவிராயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது.

பாடாலூர் அருகே அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி பூமலை சஞ்சீவிராயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பாடாலூர் கிராமத்தில் பூமலை சஞ்சீவிராயர் வழித்துணை ஆஞ்சநேயர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் 9 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதைபோல் இந்தாண்டு அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சுவாமிக்கு மலர்மாலை,வடை மாலை சாத்தப்பட்டு சுதர்சன ஹோமம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளான இரூர், பாடாலூர், திருவளகுறிச்சி, ஆலத்தூர்கேட்,நாரணமங்கலம்,விஜயகோபாலபுரம்,நாட்டார்மங்கலம்,செட்டிகுளம் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!