பெரம்பலூரில் கிராமிய அஞ்சல் ஊழியர் ஓய்வு பெற்றோர் நலச் சங்க கூட்டம்
பெரம்பலூரில் தமிழ்நாடு கிராமிய அஞ்சல் ஊழியர் ஓய்வு பெற்றோர் சங்கத்தின் மாநில அளவிலான கூட்டம் நடந்தது.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள தனியார் அரங்கில் தமிழ் மாநில கிராமிய அஞ்சல் ஊழியர் ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நடைபெற்றது.
சங்கத்தின் மாநில தலைவர் துரைசாமி, தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அஞ்சல் துறை ஊழியர் சங்கத்தின் கோட்ட செயலாளர் மற்றும் மாநில பொருளாளருமான விஷ்ணுதேவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, நடைமுறையில் உள்ள அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கைகள் பற்றி கூட்டத்தில் எடுத்துரைத்தார்,
இதனையடுத்து கூட்டத்தில்,தமிழ்மாநில கிராமிய அஞ்சலக ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் 10,000 முதல் 15,000 வரை வழங்கப்படுகிறது. மேலும் ஓய்வு பெற்றபின் பணப்பலன்கள் ரூபாய் ஒரு லட்சத்து 75 ஆயிரம் மட்டும் வழங்கப்பட்டு பணியில் இருந்து விடுப்பு பெறுகின்றனர், அவர்களுக்கு பென்ஷன் வழங்கப்படுவதில்லை, எனவே பணியாளர்களின் 70 ஆண்டு சரித்திரத்தில், கடந்த மூன்று ஆண்டுகளாக போராடி தமிழ் மாநில கிராமிய அஞ்சல் ஊழியர் ஓய்வு பெற்ற நலச்சங்கம் கடந்த 12.03,2021 ஆம் தேதி அன்று திருச்சி மாவட்ட பதிவு துறை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்தியாவிலேயே தமிழகத்தில் முதல்முறையாக அஞ்சல் துறை ஊழியர்கள் ஓய்வு பெற்ற சங்கத்தை பதிவு செய்யப்பட்டுள்ளது,
பணிபுரிந்து ஓய்வு பெற்ற நபர்களுக்கு பென்சன் வழங்காத நிலையில், பெரம்பலூரில் நடைபெறும் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதற்காக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தமிழ் மாநில கிராமிய அஞ்சல் ஊழியர் ஓய்வு பெற்றோர் நல சங்கத்தின் மாநிலச் செயலாளர் ராஜு, மாநில துணைத் தலைவர் மனோகரன், மாநில செயற்குழு உறுப்பினர் சிவப்பிரகாசம்,மாநில பொருளாளர் ராமலிங்கம், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் ஓய்வுபெற்ற அஞ்சல் ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu