பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே வீட்டுக்கூரையில் துப்பாக்கி சூடு

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே வீட்டுக்கூரையில் துப்பாக்கி சூடு
X

துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே வீட்டுக்கூரையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்களம் அருகில் துப்பாக்கி சுடுதளம் உள்ளது. இங்கு காலவதி ஆன வெடிப்பொருட்களை இந்த இடத்தில் வைத்துதான் அழிப்பார்கள்.


நேற்று நாரணமங்களம் அருகே உள்ள மருதடிஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்த சுப்ரமணி (வயது 60) என்பவரது வீட்டின் மேற்கூரையின் ஆஸ்பெட்டாஸ் சீட்டில் சத்தம் கேட்டுள்ளது. அவர் சென்று பார்க்கும் போது ஆஸ்பெட்டாஸ் சீட்டில் சிறு துளை ஏற்ப்பட்டு துப்பாக்கி குண்டு கிடைத்துள்ளது. துப்பாக்கி குண்டு. அருகிலுள்ள துப்பாக்கிசூடு பயிற்சி மையத்தில் இருந்து துப்பாக்கி குண்டு வந்ததாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலையிலேயே இச்சம்பவம் நடைபெற்றதாகவும் தற்போது தான் வெளியே தெரியவந்தாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கிசூடு மையத்தில் நேற்று பயிற்சி நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே அங்கிருந்துதான் துப்பாக்கி குண்டு வந்திருக்குமெனபொதுமக்களால் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே இதுபோல் ஒருமுறை துப்பாக்கி குண்டு வீட்டில் பாய்ந்ததாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். நல்வாய்ப்பாக இந்த நிகழ்வில் உயிர் சேதம் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவ இடத்திற்கு வந்த பாடாலூர் காவல் துறை அதிகாரிகள் துப்பாக்கி குண்டை கைப்பற்றி அதை ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!