பெரம்பலூர் நகை கடை அதிபரிடம் கொள்ளையடித்த பெண்கள் உள்பட 4 பேர் கைது

பெரம்பலூர் நகை கடை அதிபரிடம் கொள்ளையடித்த பெண்கள் உள்பட 4  பேர் கைது
X

பெரம்பலூர் நகை கடை அதிபரிடம்  கொள்ளையடித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர் நகை கடை அதிபரிடம் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூரில் அண்மையில் ஸ்ரீஆனந்த் ஜுவல்லரி நகைக்கடை உரிமையாளர் கருப்பண்ணனை அவரது வீட்டில் வைத்து கத்திமுனையில் மிரட்டி நகை பணம் கார் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது.103 சவரன் நகை,9 கிலோ வெள்ளி,10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கார் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்ட கொள்ளை சம்பவத்தில் போலீசார் 3 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

சம்பவத்தின் போது கடத்தி செல்லப்பட்ட கார் நேற்று முன்தினம் ஆலம்பாடி சாலையில் உள்ள திருநகர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்ற மண்டைசெந்தில்குமார், திருச்சி மாவட்டம் அண்ணா நகரைச் சேர்ந்த ஆனந்தன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளள்ளனர்.மேலும் திருட்டுப் பொருளை வைத்திருந்ததற்காக செந்தில்குமாரின் தாயார் ராஜேஸ்வரி , செந்தில்குமாரின் மனைவி கவிமஞ்சு ஆகிய இருவரும் கைது செய்யப் பட்டுள்ளனர்.

Tags

Next Story