பெரம்பலூர் அருகே மழையால் ஏற்பட்ட சாலை பள்ளத்தை சரி செய்த போலீசார்

பெரம்பலூர் அருகே மழையால் ஏற்பட்ட சாலை பள்ளத்தை சரி செய்த போலீசார்
X

பெரம்பலூர் அருகே சாலைப்பள்ளத்தை போலீஸ்காரர் சரி செய்தார்.

பெரம்பலூர் அருகே மழையால் ஏற்பட்ட சாலை பள்ளத்தை சரி செய்த போலீசாருக்கு எஸ்.பி. மணி பாராட்டு தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பருவ மழை வழக்கத்திற்கு அதிகமாகவே பெய்துள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பெரம்பலூரிலிருந்து ஆத்தூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு நாளைக்கு அதிகப்படியான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்பு மழையின் காரணத்தினால் ஏற்பட்ட பள்ளத்தினால் வாகன ஓட்டிகள் வாகனத்தை ஓட்ட சிரமப்படுவதாலும் இதனால் வாகன விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாலும் அதனை தடுக்க பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து எண்-4 காவல்துறையினரான தலைமைக் காவலர் இளையபெருமாள், முதல் நிலைக் காவலர் சரவணன் மற்றும் காவலர் பாஸ்கர் ஆகியோர் மேற்படி இடத்தில் இருந்த பள்ளத்தினை அருகிலிருந்த மண்களை கொண்டு தற்காலிகமாக பள்ளத்தினை சரி செய்தனர். காலர்களின் இந்த செயலினை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி பெரிதும் பாராட்டினார்.

Tags

Next Story