மயான பாதையை மீட்டுத்தரக் கோரி பெரம்பலூரில் சாலை மறியல்

மயான  பாதையை மீட்டுத்தரக் கோரி பெரம்பலூரில் சாலை மறியல்
X

மயானத்திற்கு செல்லும் பாதையை மீட்டுத்தரக் கோரி திட்டக்குடி ஆடுதுறை செல்லும் சாலையில் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட மயானத்திற்கு செல்லும் பாதையை மீட்டுதர கோரி பொதுமக்கள் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம், சு.ஆடுதுறை ஊராட்சியில் ஆதிதிராவிடர் மக்கள் நூறு குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர் . மக்களுக்காக இருக்கும் மயானத்திற்கு செல்லும் பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

இது சம்பந்தமாக பாதையை மீட்டுதர கோரி ஆதிதிராவிடர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் அப்பகுதி மக்கள் திடீர் சூ.ஆடுதுறை, திட்டக்குடி செல்லும் சாலையில் மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது . உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

Tags

Next Story
மாணவனின் துயர சம்பவம்: கிணற்றில் குளிக்கும் போது உயிரிழப்பு - மரக்கட்டை விழுந்து விபத்து