வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டம் ரத்தை கண்டித்து பெரம்பலூரில் சாலை மறியல்

வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டம்  ரத்தை  கண்டித்து பெரம்பலூரில் சாலை மறியல்
X

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து பெரம்பலூரில் பா.ம.க வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு சட்டத்தை நீதி மன்றம் ரத்து செய்ததைக் கண்டித்து பெரம்பலூரில் பா.ம.கவினர் சாலை மறியல் செய்தனர்.

கல்வி வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவித உள் ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்ததை கண்டித்து பெரம்பலூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்ததை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் புதிய பேருந்து நிலையம் எதிரே திரளானவர்கள் திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட பாமக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாநில பொறுப்பாளர் அனுகூர் ராஜேந்திரன் ,வழக்கறிஞர் தங்கதுரை, வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் குமரவேலன் ,கண்ணபிரான் ,நகர செயலாளர் இமயவரம்பன் ,ஓலைப்பாடி பிரபு மற்றும் பாமக ஒன்றிய செயலாளர்கள் உட்பட பாட்டாளி மக்கள் கட்சியினர் 25 க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்

Tags

Next Story