பெரம்பலூர் அருகே நடந்த சாலை விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 2 பேர் பலி

பெரம்பலூர் அருகே நடந்த சாலை விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 2 பேர் பலி
X

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான கார்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே நடந்த சாலை விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் உள்ளிட்ட ஆறு ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று விட்டு இன்று அதிகாலை சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அயன் பேரையூர் பிரிவு ரோடு அருகே வந்த போது சாலையோர மைல்கல் மீது ஐயப்ப பக்தர்கள் வந்த டவேரா வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் வந்த ஆனந்த், சூர்யா என இரண்டு பேர் உயிரிழந்தனர்.

வாகனத்தை ஒட்டி வந்த கணேசன், ரமேஷ், செல்வமணி, லெட்சுமணன் ஆகிய நான்கு பேர் படுகாயத்துடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்த இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து மங்கள மேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!