குடியரசு தினம்: பெரம்பலூரில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார் ஆட்சியர்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.
நாட்டின் 73வது குடியரசுதினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.நினைவு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடபிரியா தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்தார்.
தொடர்ந்து, சமாதான புறாக்களை வானில் பறக்கவிட்ட ஆட்சியர், காவல்த்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மேலும் காவல், கல்வி, தீயணைப்பு உட்பட 12 துறைககளை சேர்ந்த 169 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களைளையும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா வழங்கினார். இதுதவிர காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 19 பேருக்கு தமிழக முதல்வர் காவலர் பதக்கத்தை வழங்கிய மாவட்ட ஆட்சியர், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளை கௌரவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu