மழையின் போது சேதமடைந்த ரஞ்சன் குடி கோட்டையை சீரமைக்க கோரிக்கை

மழையின் போது சேதமடைந்த ரஞ்சன் குடி கோட்டையை சீரமைக்க கோரிக்கை
X

ரஞ்சன் குடி கோட்டை

மழையின் போது சேதமடைந்த ரஞ்சன் குடி கோட்டையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பெரம்பலூர் அருகே ரஞ்சன் குடி கிராமத்தில் நவாப் கால கோட்டை உள்ளது. இதற்கு ரஞ்சன் குடி கோட்டை என பெயர். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இந்த ரஞ்சன்குடி கோட்டை இருந்துவருகிறது.பிரமாண்ட கற்சுவர்,வரலாற்றை தாங்கி நிற்கும் இடம் இது என்பதால் சுற்றுலா பயணிகள் வரலாற்று ஆய்வாளர்கள் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் தொடர்மழையின் போது கோட்டை சுவர் ஓரம் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை சீர் செய்யாவிட்டால் சுவற்றிற்கு பிடிஇல்லாமல் சரிந்து விடும் என கூறும் பொதுமக்கள் பாதிப்பை உடனடியாக சீர்செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!