/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சி

பெரம்பலூர் மாவட்டம் தேனூர் கிராமத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை போலீசார் நடத்தினர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த  நிகழ்ச்சி
X

பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியன் மற்றும் அவரது குழுவினரான காவல் ஆய்வாளர் விஜயலெட்சுமி உதவி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் தலைமைக் காவலர் மருதமுத்து ஆகியோர்கள் இணைந்து பெரம்பலூர் மாவட்டம் தேனூர் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் அப்போது எடுத்து கூறினார்கள்.

மேலும் குழந்தை தொழிலாளர் முறையை குறித்தும், உங்கள் பகுதியில் குழந்தை தொழிலாளர் முறை இருந்தால் அதனை ஒழிக்க ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கவுன்சிலிங் நிபுணர் பிரேமா, அங்கன்வாடி மைய ஆசிரியர், தேனூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.

Updated On: 2 March 2022 2:25 PM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!