பெரம்பலூர்: மழை நீர் ஊருக்குள் செல்வதை தடுக்க அவசர கால நடவடிக்கை
பெரம்பலூர் அருகே மழை நீர் ஊருக்குள் செல்வதை தடுக்க அவசர கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.வழிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாவட்டம் முழுவதும் விடிய விடிய பலத்த மழை பெய்தது.கடந்த 24 மணி நேரத்தில் அகரம் சீகூர், லைப்பைகுடிகாட்டில் தலா 10 செமீ மழை பதிவானது.மாவட்டம் முழுவதும் 744 மில்லி மீட்டர் மழை பதிவானது.இதனால் கோனேறி ஆறு,மருதையாறு ஆகியவற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.கரையோரம் இருக்கும் விவசாய நிலங்களுக்குள் புகுந்த வெள்ளநீர் பருத்தி, நெல்,பயிர்களை மூழ்கடித்து செல்கிறது.பனங்கூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது.
மருதையாறு மற்றும் கிளை ஓடைகளில் இருந்து செல்லும் வெள்ள நீர் கொட்டறை மருதையாறு நீர்த்கேக்கத்திற்கு செல்கிறது.நீர்த்தேக்கம் ஏற்கனவே நிரம்பி விட்டதால் வரத்து நீரான சுமார் 3500 கன அடி நீர் உபரி நீர்போக்கி வழியாக அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.அதனால் இருகரையோரம் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் -சரவணபுரம் இடையே உள்ள தரைப்பாலத்தை மூழ்கியவாறு வெள்ள நீர் சென்று கொண்டிருக்கிறது.அதிகாலை 5.30 மணிக்கு அங்கு சென்ற மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா தீயணைப்பு துறையயயினரை வரவழைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து வெள்ளநீர் ஊருக்குள் செல்லாதவாறு ஜே.சி.பி. மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.அதே பெருமத்தூர்- மிளகாநத்தம் இடையே தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.மழை தொடர்ந்து பெய்துவருவதால் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu