பிரபாகரன் பிறந்த நாளில் குருதி தானம் செய்த நாம் தமிழர் கட்சியினர்

பிரபாகரன் பிறந்த நாளில் குருதி தானம் செய்த நாம் தமிழர் கட்சியினர்
X

பிரபாகரன் பிறந்த நாளையொட்டி நாம் தமிழர் கட்சியினர் பெரம்பலூில் ரத்ததானம் செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பிரபாகரன் பிறந்த நாளில் நாம் தமிழர் கட்சியினர் குருதி தானம் செய்தனர்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் 67வது பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் லப்பைகுடிகாடு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் இன்று பெரம்பலூர் அரசு மருத்துமனையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் தொகுதி செயலாளர் பாலகுரு மற்றும் குன்னம் தொகுதி செயலாளர் ராஜ பாக்கியம் தலைமை தாங்கினார் . சிறப்பு விருந்தினராக திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் பிரபு கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் இந்த ரத்ததான முகாமில் பங்கேற்று குருதி தானம் செய்தனர். ஆபத்துக்காலத்தில் என்ன பிரச்சினையாக இருந்தாலும் நான் தமிழர் கட்சி பொதுமக்களுக்கு துணையாக நிற்கும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!