பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையத்தை பொதுமக்கள் முற்றுகை

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வாலிகண்டபுரம்,பிரம்மதேசம்,சு.ஆடுதுறை ஆகிய ஊராட்சிகளில் தலா 1 வார்டு உறுப்பினருக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது.
அதில் வாலிகண்டபுரம் ஏழாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு உதயமன்னன்,சுப்பிரமணி,சரவணண்,விஜயகுமார்,கோகுலகிருஷ்ணன் என 5 பேர்களத்தில் உள்ளனர்.வாக்குப்பதிவு நடைபெறும் 7 வதுவார்டில் 213 ஆண்வாக்காளர்கள்,210 பெண்வாக்காளர்கள் என மொத்தம் 423 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக புகார் எழுந்துள்ளது.ஏற்கனவே பட்டியலில் இருந்தவர்களின் பெயர் நீக்கப்பட்டுவிட்டதாகவும்,வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு சிலரது பெயர் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் உயிரிழந்தவர்களின் பெயர் வாக்காளர்பட்டியலில் இருந்து நீக்கவில்லை என்றும் வேறு வார்டில் உள்ளவர்களின் பெயர் 7 வது வார்டு வாக்காளர்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.சம்பந்தப்பட்ட வார்டில் குடியிருந்தும் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ளவர்கள் ஆத்திரமடைந்து வாக்குச்சாவடி மையத்தை முற்றுகையிட்டனர்.
இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த தங்களுடைய வாக்குரிமை பறிக்கப்பட்டுவிட்டதாக முற்றுகையிட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்க நியாயமான முறையில் வாக்குப்பதிவை நடத்திட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu