பெரம்பலூர் மாவட்டத்தில் 46,000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
பெரம்பலூர் மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் பணிகளுக்காக 4 அரசு மருத்துவமனைகள், 29 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 96 துணை சுகாதார மையங்கள், தனியார் மருத்துவமனைகள், 42 பள்ளிக்கூடங்கள், 246 அங்கன்வாடி மையங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற்றது. அருகாமையிலுள்ள மாவட்டங்களின் குடிசைபகுதிகள், நரிக்குறவர்கள் பகுதிகள், பணி நிமித்தமாக இடம்பெயர் மக்கள் வாழும் பகுதிகள் ஆகிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ள 387 மையங்களில், ஐந்து வயதிற்குட்பட்ட 45433 குழந்தைகளுக்கு போலியோசொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளில் பொது சுகாதாரத் துறை பணியாளர்களுடன் பிற துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என முகாம் ஒன்றுக்கு 4 நபர்கள் வீதம் பல்வேறு துறைகளை சார்ந்த 1548 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பேருந்து நிலையங்கள், கோவில்கள், மற்றும் மக்கள் கூடுமிடங்களில் உள்ள குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. ஏதேனும் காரணங்களுக்காக விடுபடும் குழந்தைகளுக்கு அடுத்து வரும் இரண்டு நாட்களில் இப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று பார்வையிடப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் பங்கேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கினார் இந்நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் அர்ஜுனன், இருக்கை மருத்துவ அலுவலர் டாக்டர் கலா, துணை இயக்குனர் தொழுநோய் டாக்டர் சுதாகர், பெரம்பலூர் விக்டரி லயன்ஸ் கிளப் தலைவர் குணசீலன் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu