பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் குழந்தைகள் காப்பகம்

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில்  காவலர் குழந்தைகள் காப்பகம்
X

பெரம்பலூர் ஆயுதப்படை வளாகத்தில் குழந்தைகள் காப்பகம் திறந்து வைக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நூலகம் மற்றும் காவலர் குழந்தைகள் காப்பகம் திறந்து வைக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வசித்து வரும் காவலர்களின் குழந்தைகள் காவலர்களின் பணியின் போது வீட்டில் தனிமையாக இருப்பதை உணர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி காவலர்களின் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் ஆயுதப்படை வளாகத்தில் காவலர் குழந்தைகள் காப்பகத்தை துவங்கி வைத்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி மகிந்தார்.

மேலும் ஒரு புத்தகம் தான் சிறந்த மனிதனை உருவாக்கும் என்பதை நன்கு அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆயுதப்படை வளாகத்தில் காவலர்களின் அறிவு பசிக்கு விருந்தளிக்கும் வகையில், பல்வேறு வகையான நாவல்கள், தொடர் கதைகள், பொது அறிவு புத்தகங்கள் என நுற்றுக் கணக்கான பத்தகங்களை ஒன்றிணைத்து காவலர்களுக்கான நூலகத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது பெரம்பலூர் ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் சுப்பாராமன், காவல் ஆய்வாளர் அசோகன் உதவி ஆய்வாளர்கள் காவல்துறையினர் மற்றும் காவலர் குழந்தைகள் என பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!