பெரம்பலூர் அருகே கஞ்சா வியாபாரியை கைது செய்த போலீசார்

பெரம்பலூர் அருகே  கஞ்சா வியாபாரியை கைது செய்த போலீசார்
X

பைல் படம்

பெரம்லூர் அருகே கஞ்சா வியாபாரியை கைது செய்த போலீசார் 1 கிலோ 200 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மாவட்ட காவல்துறையினரால் சிறப்பு ரோந்து அலுவல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மங்களமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தமிழ்செல்வி நிலைய காவலர்களுடன் மாலை ரோந்து அலுவலில் இருந்த போது அவருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி லப்பைக்குடிக்காடு பஸ் ஸ்டாப் அருகே சந்தேகப்படியாக நின்று கொண்டிருந்த நபரை சோதனை செய்ய அவர் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை வைத்திருப்பது தெரியவந்தது.

பின்னர் கஞ்சா வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த நியாஸ் அகமது (22), என்பவரையும் பறிமுதல் செய்த 1,200 கிராம் கஞ்சாவையும் எடுத்துக் கொண்டு உதவி ஆய்வாளர் செந்தமிழ் செல்வி காவல் நிலையம் வந்து மேற்படி நபர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.

Tags

Next Story
ai in future agriculture