பெரம்பலூர்: ஜெய்பீம் திரைப்படத்தை தடை செய்யக்கோரி பாமக கட்சியினர் மனு

பெரம்பலூர்: ஜெய்பீம் திரைப்படத்தை தடை செய்யக்கோரி  பாமக கட்சியினர் மனு
X

மனு அளித்த பாமகவினர்.

ஜெய்பீம் திரைப்படத்தை தடை செய்யக்கோரி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாமகவினர் மனு அளித்தனர்.

ஜெய் பீம் படத்தை தடை செய்ய கோரியும், இயக்குனர் ஞானவேல், நடிகர் சூர்யா தயாரிப்பாளர் ஜோதிகா மீது நடவடிக்கை எடுக்க கோரி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பா.ம.க.வினர் மனு அளித்தனர்.

இது தொடர்பாக, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்ட பா.ம.க சார்பில், மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் பா.ம.க நிர்வாகிகள் மனு அளித்தனர். அந்த மனுவில் ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமுதாய மக்களின் அடையாள சின்னமாக விளங்கும் அக்னி கலசத்தை, காட்சிப்படுத்தி வன்னியர் சமுதாயத்தை வில்லனாக குறிப்பிட்டுள்ளனர். இப்படத்தை தடை செய்ய கோரியும், நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர். இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!