உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்டுத் தரக்கோரி ஆட்சியரிடம் மனு
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த உக்ரைனில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள்
பெரம்பலூர் மாவட்டம் முருக்கன்குடியைச் சேர்ந்த நதியா, அரணாரை கிராமத்தைச் சேர்ந்த கிருபாசங்கர் மற்றும் பெரம்பலூரைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், ரோகித் ,அருண், செளமியா , ரத்திஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உக்ரைன் நாட்டில் மருத்துவ கல்வி பயின்று வருகிறார்கள்.
இந்நிலையில் உக்ரைனில் தற்போது ரஷ்ய படைகள் தாக்குதலை தொடங்கி அங்கு போர் பதற்றம் நிலவுகிறது, அந்த மாணவர்களில் பெரும்பாலானோர். அங்குள்ள மெட்ரோ ரயில்நிலைய சுரங்கத்தளத்தில் உயிர் பயத்துடன் தங்கியுள்ளதாக தகவல் வருகிறது. அவர்களுக்கு அடுத்த வேலை உணவே கிடைக்காது என்று அந்த மாணவா்கள் கண்ணீர் மல்க கூறியதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். உக்ரைனில் உள்ள தங்கள் பிள்ளைகள் அடுத்த வேலை உணவே கிடைக்காமல் தவித்து வருவது தோடு. ரஷ்ய ராணுவம் குண்டு மழையால் உயிர் பயத்துடன் முடங்கி கிடக்கின்றனர். அவர்களை மீட்டு வருவதற்கு மத்திய மாநில அரசுக்கு அழுத்தம் தாருங்கள் என பெரம்பலூர் மாவட்டஆட்சியரிடம் மாணவர்களின்பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu