பெரம்பலூர்: 5 ஆண்டு பணி முடித்த பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் மனு

பெரம்பலூர்: 5 ஆண்டு பணி முடித்த பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் மனு
X

மனு கொடுக்க வந்த சுகாதார பணியாளர்கள்.

பெரம்பலூர்: 5 ஆண்டு பணி முடித்த பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சுகாதார துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தின் தலைவர் கோபிநாத் தலைமையில், அச்சங்கத்தினர் இன்று பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் நிர்வாக அதிகாரி விமலாவிடம் மனு கொடுத்தனர்.

அதில், 5 ஆண்டுகள் பணி முடித்திட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களை காலமுறை ஊதியம் பெறும் காலிப்பணியிடத்திற்கு ஈர்க்க அரசின் அனுமதி கோரி பொது சுகாதாரம் இயக்குனரால் கடந்த 2018-ம் ஆண்டு கோப்பு அனுப்பப்பட்ட நிலையில், அரசு முதன்மை செயலாளர் அக்கோப்பு நிதித்துறைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து தாமதம் ஆகி கொண்டிருக்கிறது. காலமுறை ஊதியம் அனுமதிக்கப்பட்ட நிரந்தர பணியிடங்களில் அரசு விதிகளின் படி பணி நியமனம் செய்யப்பட்டு கடந்த 9 ஆண்டுகளாக தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருவதை பரிசீலனைக்கு உட்படுத்தி எங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க அரசணை வெளியிட ஆவண செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

Tags

Next Story
பவானி வர்த்தக மையத்தில் புதிய பாக்கு சீசன் தொடக்கம்