பெரியார் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மலர் மாலை அணிவிப்பு

பெரியார் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மலர் மாலை அணிவிப்பு
X

பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பெரம்பலூரில் பெரியார் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தந்தை பெரியாரின் 48-வது நினைவு நாளில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை அவரது திருவுருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட செய்தி தொடர்பாளர் வழக்குரைஞர் இரா.ஸ்டாலின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ரமேஷ் ,தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் கருணாநிதி, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் அகஸ்டின், ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்க தலைவர் ரங்கநாதன், ஆகியோர் உடனிருந்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநில செயலாளர் வழக்குரைஞர் அண்ணாதுரை, மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர் பழனிவேல் ராஜா ,வழக்கறிஞர் அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் வழக்கறிஞர் மணிமாறன், வழக்கறிஞர் பிரபு தேவன், முற்போக்கு மாணவர் கழக மாவட்ட துணை அமைப்பாளர் கரு.அய்யம் பெருமாள், அம்பேத் கோகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!