பெரம்பலூர் அருகே தனியார் பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பலி

பெரம்பலூர் அருகே தனியார் பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பலி
X
திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மங்களமேடு அருகே முருக்கன்குடி கைகாட்டி பிரிவு சாலையில் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க நின்று கொண்டிருந்த வாலிபர் மீது சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வாலிபர் உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம் ரஞ்சன்குடி கிராமத்தை சேர்ந்த சரவணன் (29) என்ற இளைஞர். இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க நின்ற போது காரைக்குடியிலிருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து மோதியது. இந்த விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த மங்களமேடு போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர் மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்